'கஜகஸ்தானில் கொரோனாவை விடவும் வேகமாகப் பரவும் நிமோனியா' - சீனா குற்றச்சாட்டுக்கு மறுப்பு

0 8161

'கொரோனாவை விடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொடிய நிமோனியா காய்ச்சல் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வேகமாகப் பரவுகிறது' எனும் சீனத் தூதரகத்தின் அறிவிப்பை 'ஃபேக் நியூஸ்' என்று நிராகரித்துள்ளது கஜகஸ்தான்.

கஜகஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதுவரை சுமார் 55,000 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 264 பேர் இறந்துள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 1962 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

image

கொரோனா வைரசுடன் நிமோனியா காய்ச்சலும் கஜகஸ்தானில் உள்ள கசக் நகரத்தில் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிமோனியா என்பது நுரையீரல் அழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. நிமோனியா நோய் தாக்கினால் கோவிட 19 ஜப் போன்றே நுரையீரலில் அதிகளவு நீர்மம் சேர்ந்து மூச்சுவிட முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நோய் தாக்கினால் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

உலகை எச்சரிக்கும் விதத்தில் கஜகஸ்தானில் இயங்கும் சீனத் தூதரகம் வீ சாட் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "கசக் நகரத்தில் உள்ள அடிராய், அக்டோப், ஷைம்கன்ட் ஆகிய பகுதியில் ஜூன் மத்தியில் நிமோனியா நோய் பரவல் குறிப்பிடும்படி அதிகமாகியுள்ளது. கஜகஸ்தானில், இந்த ஆண்டில் நிமோனியா காய்ச்சலால் மட்டும் 1772 பேர் இறந்துள்ளனர். இதில் ஜூன் மாதம் மட்டும் சீன குடிமகன்கள் உட்பட 628 பேர் இறந்தனர். நிமோனியா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது கொரோனா வைரசால் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை விடவும் பல மடங்கு அதிகம்" என்று எச்சரிக்கை விடுத்தது.

கஜகஸ்தானைச் சேர்ந்த கசின்பார்ம் செய்தி ஏஜென்சி, "2019 -ம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் மட்டும் 2.2 மடங்கு நிமோனியா பாதிப்பு அதிகமாகியுள்ளது” என்று கூறியது.

சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விதத்தில் கஜகஸ்தான் சுகாதார அமைச்சகம், "இது தவறான தகவல். அவர்களின் இறப்புக்கு நிமோனியா தான் காரணம் என்று இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. இறப்புக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா கிருமி கூட அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம். நிமோனியா காய்ச்சல் அதிகமாகப் பரவுகிறது என்று சீன ஊடகங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை" என்று கூறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments